ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய-அமெரிக்க பிணைக் கைதி எடன் அலெக்சாண்டர் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குத் திரும்பினார். 19 மாதங்கள் ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேலிய-அமெரிக்க பிணைக் கைதி எடன் அலெக்சாண்டர் திங்கள்கிழமை மாலை இஸ்ரேலை வந்தடைந்ததாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக காசாவில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், கறுப்பு டி-சர்ட் மற்றும் பேஸ்பால் தொப்பி அணிந்திருந்த அலெக்சாண்டர், ஆயுதமேந்திய ஹமாஸ் போராளிகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஒப்படைப்பு செயல்முறையின் போது செல்வதைக் காட்டியது.
வாஷிங்டனுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அலெக்சாண்டர் விடுவிக்கப்பட்டார்.