அமெரிக்கக் குழுவின் மூன்று நாள் பயணம், கிரீன்லாண்டின் தேவைகளையோ விருப்பங்களையோ பிரதிபலிக்கவில்லை என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் செவ்வாயன்று தெரிவித்தார்.
டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீண்ட்லாண்டுக்கு அமெரிக்க உயர்மட்டக் குழு ஒன்று செல்வதை டென்மார்க் ,கிறீண்டலண்ட் அரசியல் பிரமுகர்கள் கண்டித்துள்ளனர். ஆர்க்டிக் தீவைக் கைப்பற்றுவதாக ட்ரம்ப் நிர்வாகம் அச்சுறுத்துவது தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், இது உள்ளூர் இறையாண்மையை “ஆத்திரமூட்டும்” மற்றும் “அவமரியாதை” என்று அவர்கள் விமர்சித்துள்ளனர்.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் தலைமையிலான குழுவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் ஆகியோரும் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.