அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டியேகோ நகரத்தில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று(14) காலை 10.08 மணியளவில் இந் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ரிச்டர் அளவின் படி 5.2 ஆகப் பதிவாகியுள்ளது.
தரை மட்டத்திலிருந்து 13.4 கிலோமீட்டர் ஆழத்தில் அதன் மையப்பகுதி பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 193 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லொஸ்ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.