இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவுக்கு இணங்க, அமெரிக்க ஒலிம்பிக் & பாராலிம்பிக் கமிட்டி தனது கொள்கையை புதுப்பித்துள்ளது. பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கை பெண்கள் போட்டியிடுவதைத் தடை செய்கிறது.
ட்ரம்பின் உத்தரவு உயர்நிலைப் பாடசாலை, கல்லூரி விளையாட்டுகளுக்கு அப்பாற்பட்டது, அமெரிக்காவில் போட்டியிட விரும்பும் திருநங்கைப் பெண்களுக்கு விசாக்களை மறுக்க அமெரிக்க அரசாங்கத்தைக் கோருகிறது.
2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் திருநங்கை விளையாட்டு வீரர்கள் போட்டியிட அனுமதிக்க மாட்டேன் என்றும் ட்ரம்ப் கூறினார்.