இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானி நிறுவனம் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் இந்த திட்டம் தொடர்பாக அதானி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே இன்னும் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த திட்டங்களின் கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாட்டை எட்டுவதற்கு உரிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பூநகரி புதுப்பிக்கத்தக்க காற்றாலை திட்டத்தில் இருந்து கட்டணப் பிரச்சினை காரணமாக விலகுவதாக அதானி குழுமம் சமீபத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவித்திருந்தது.
ஆனால் குறித்த திட்டத்தை முற்றாக நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாடு ஏற்பட்ட பிறகு ஜூன் மாதத்திற்குள் இந்தத் திட்டத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படக்கூடும் எனவும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.