தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் பேரறிஞர் அண்ணா சிலை உள்ள நிலையில், இந்த சிலைக்கு அவ்வப்போது மாலை அணிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் திடீரென அண்ணா சிலை மீது திமுக, பாஜக கொடிகளை இணைத்து சில மர்ம நபர்கள் போட்டுள்ளனர்.
காலையில் இதைப் பார்த்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக நிர்வாகிகளுக்கு தகவல் வழங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, அண்ணா சிலை மீது போடப்பட்டிருந்த திமுக, பாஜக கொடிகளை அகற்றினர். அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருவதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Trending
- நீரிழிவுநோய் நூல் வெளியீட்டு விழா
- இருபாலை கற்பகப் பிள்ளையார் இரதோற்சவம்
- பொல்ஹேன கடற்கரையில் வாகன தரிப்பு கட்டணம் இடைநிறுத்தம்
- பாராளுமன்ற ஊழியர்களின் மாதாந்திர உணவுக் கட்டணம் உயர்வு
- சுற்றுலா மறுமலர்ச்சி கண்காட்சியை திறந்து வைத்தார் ஜனாதிபதி
- 11 வார முற்றுகை முடிந்தது காஸா மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது
- பங்களாதேஷில் மீண்டும் ஆட்சி கவிழும் அபாயம்
- சிறையில் மோசமாக நடத்துவதாக இங்கிலாந்து பெண் குற்றச் சாட்டு