வஸ்கடுவாவில் உள்ள ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகா விஹாரையில் வைசாலியிலுள்ள மன்னர் அசோகரின் தம்மத் தூணை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜூலை 21, ஆம்திகதி திறந்து வைத்தார்.
அங்கு அவர் உரையாறுகையில், இலங்கையில் திறக்கப்பட்ட முதல் அசோகன் தூண் பிரதி இது என்று மகாநாயக்க தேரர் எடுத்துரைத்தார். புத்த மத போதனைகளைப் பாதுகாப்பதில் அசோக மன்னரின் முக்கிய பங்கைப் பற்றி அவர் பேசினார், கோயிலில் உள்ள நினைவுச்சின்னங்களின் வரலாற்றுப் பயணத்தையும் விவரித்தார். பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் கீழ் இந்திய அரசு புத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மகாநாயக்க தேரர் ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.