ஹட்டன் நகரில் காலணி விற்பனை நிலையமொன்றில் இன்று மதியம் ஒரு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கடை மூடப்பட்டிருந்தவேளையிலேயே தீ விபத்து ஏற்பட்டு, வேகமாக பரவியுள்ளது.
ஹட்டன் – டிக்கோயா நகரசபை தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், கடையில் இருந்த ஏராளமான காலணிகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீ விபத்தால் அப்பகுதயில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Trending
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”