ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,செப்டம்பர் 22 ஆம் திகதி அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தனது பயணத்தின் போது, அவர் பல நாட்டுத் தலைவர்கள்,அரசு அதிகாரிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸையும் சந்திப்பார்.
அமெரிக்காவில் தனது பணிகளை முடித்த பின்னர், ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி செப்டம்பர் 26 அன்று ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார்.
ஜப்பானில், செப்டம்பர் 27 அன்று நடைபெறும் உலகப் பொருட்காட்சி சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் அவர் கலந்து கொண்டு, மூத்த ஜப்பானிய அதிகாரிகளுடன் உயர் மட்டக் கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.