வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள் அந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குருநாகலில் ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர், இந்த குற்றவாளிகள் மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளில் இருப்பதாகவும், அவர்களைக் கைது செய்ய சர்வதேச பொலிஸ் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மலேசியாவில் இருப்பதாக சமூக ஊடகங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் மூலம் சமீபத்தில் தகவல் பரப்பப்பட்டதாகவும், இந்த தகவல் துல்லியமானது அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Trending
- கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு
- கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு
- நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் : சாரதிகள் நெருக்கடி
- மண்ணெண்ணெய் கலந்து பாரவூர்தி செலுத்திய சாரதி கைது
- தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரிப்பு
- பெல்ஜிய இசைத் திருவிழா மேடையில் பாரிய தீ விபத்து
- காணாமல் ஆக்கப்பட்ட 281 பேரின் பெயருடன் வெளியான அறிக்கை
- ‘பசுமை சைக்கிள் ஓட்டுதல் சுற்றுலா’ நிறைவடைந்தது