ஜரோப்பிய கண்டத்தின் பல நாடுகள் வெப்ப அலையின் தாக்கத்தில் சிக்கித் தவிக்கின்றன.
ஸ்பெயினின் சில பகுதிகளும் போர்த்துக்கல்லும் 46c வெப்பநிலையை பதிவு செய்துள்ளன. பிரான்சிலும் வெப்பநிலை உயர்ந்து வருவதால், அரசு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இத்தாலியில் வெளிப்புற வேலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் 35c ஆக இருக்கும் வெப்பநிலை, வார மத்தியில் 39c வரை உயர இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தமது X தள செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
