தபால் முத்திரை வருமானம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் முத்திரைக் கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கான முன்மொழிவை தபால் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது.
மின்சாரம், நீர், எரிபொருள், போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட ஏனைய செலவினங்கள் காரணமாகவும்,புதிய தொழில்நுட்பதாலும் தபால் திணைக்களத்தின் வருமானம் குறைந்துள்ளதனால் இந்த யோசனை திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.
தபால் திணைக்களத்தின் கடிதங்களை வழங்குவதற்கு பொது போக்குவரத்து பயன்படுத்தப்படுவதாகவும், கடந்த காலங்களில் புகையிரத போக்குவரத்து கட்டணங்களும் சுமார் 600% அதிகரித்துள்ளதாக தபால் மா அதிபர்தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்தின் வருவாயை அதிகரிப்பதற்காக தற்போது கூரியர் சேவை முறையை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Trending
- பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
- செம்மணியில் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் போராட்டம்
- போலி நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது
- ட்ரம்பின் வரியால் வோக்ஸ்வாகனுக்கு 1.5 பில்லியன்டொலர் இழப்பு
- காஸாவுக்கு உதவ ஜோர்தான் விமானங்கள் தயார்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
- இலங்கை தொழிலாளிக்காக கண்டனம் தெரிவித்த கொரிய ஜனாதிபதி
- இலங்கையில் அதிகரிக்கிறது சைபர் குற்றம்