கொழும்பு பங்குச் சந்தையின் இந்த வாரத்தின் தொடக்க வர்த்தக நாளான இன்று திங்கட்கிழமை (10) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்ணில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.
அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 168.41 புள்ளிகள் குறைந்து 16,566.27 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண் 32.69 புள்ளிகள் குறைந்து 4,959.45 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளன.
அனைத்து பங்கு விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சரிவுக்கு, செலிங்கோ ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் பங்கு விலையில் ஏற்பட்ட 5.98% சரிவு மற்றும் LOLC ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், DFCC வங்கி மற்றும் எய்டிகன் ஸ்பென்ஸ் ஆகியவற்றின் பங்கு விலைகளில் ஏற்பட்ட சரிவு ஆகியவை முக்கிய காரணமாகும்.
முந்தைய வர்த்தக நாளுடன் ஒப்பிடும்போது, இன்று 148 நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்துள்ள நிலையில், அதே நேரத்தில் 52 நிறுவனங்களின் விலைகள் மட்டுமே அதிகரித்திருந்தன.
இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 2.07 பில்லியன் ரூபாவாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
Trending
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு