இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது அரைசதம் அடித்து, இங்கிலாந்தில் ஒரு இந்தியவீரர்எடுத்த அதிக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார்.
லார்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்டில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா, மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் மதிய உணவுக்கு முன் ரிஷப் பண்ட்,கே.எல்.ராகுல் அவரது வரலாற்று சதத்திற்குப் பிறகு அவுட்டாகியது உள்ளிட்ட முக்கிய ஆட்டமிழப்புகளுக்குப் பிறகு நிலைத்து நின்று இந்தியாவின் இன்னிங்ஸை வலுப்படுத்தினார்.
இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டியுடன் ஆறாவது விக்கெட்டுக்கு 72 ஓட்டங்கள் கூட்டணி அமைத்து, இந்திய அணி 300 ஓட்டங்களை கடக்க உதவினார்.
இந்த போட்டியில் 87 பந்துகளில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 25வது அரைசதத்தை எட்டினார்.
இதன் மூலம் இங்கிலாந்தில் ஏழாவது அரைசதத்தை பதிவு செய்து, இங்கிலாந்தில் அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே ஆகியோரைச் சமன் செய்தார்.
ஆறு அரைசதங்ளுடன் இருந்த கே.எல்.ராகுலையும், சேதேஷ்வர் புஜாராவையும் விஞ்சியுள்ளார்.
த சச்சின் டெண்டுல்கர் (12), ராகுல் ட்ராவிட், சுனில் கவாஸ்கர் குண்டப்பா விஸ்வநாத் (தலா 10) ஆகியோர் மட்டுமே இங்கிலாந்தில் இந்தியாவுக்காக ஜடேஜாவை விட அதிக அரைசதங்கள் குவித்தவர்களாக உள்ளனர்.