ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2025 உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார நேற்று வியாழக்கிழமை (12) வியட்நாம் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான புய் தான் சன்னைச் சந்தித்தார்.
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கு வியட்நாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைந்து கொள்வதற்கு தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வியட்நாம் தயாராக இருப்பதாகவும் வியட்நாம் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான புய் தான் சன் தெரிவித்தார்.
கடந்த 55 வருடங்களாக வியட்நாமிற்கும் இலங்கைக்கும் இடையில் கட்டியெழுப்பப் பட்டிருக்கும் அரசியல் நம்பிக்கை மற்றும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை சாதகமாக மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா.தலைவர் கண்டனம்