வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் ஜெஃப்ரி எப்ஸ்டீன் அறிக்கை தொடர்பாக ட்ரம்ப்10 பில்லியன் டொலர் நஷ்ட ஈடு கோரி ட்ரம்ப் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு “மோசமான” பிறந்தநாள் கடிதம் என்று கூறப்படும் ஒரு செய்தியை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டதை அடுத்து, அந்த செய்தித்தாளில் ட்ரம்ப் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் ஒரு செய்தித்தாள் வெளியிடப்பட்டதை அடுத்து, ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளிக்கிழமை வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் வெளியீட்டாளரும் அதன் தலைவருமான ரூபர்ட் முர்டோக்கிற்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
புளோரிடாவின் தெற்கு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, குறைந்தபட்சம் $10 பில்லியன் இழப்பீடு கோருகிறது.
2000 களின் முற்பகுதியில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், ட்ரம்பின் கையொப்பம், பிறந்தநாள் செய்தி , ஒரு நிர்வாணப் பெண்ணின் வரைபடம் ஆகியவை இடம்பெற்றிருந்ததாக அந்த செய்தித்தாள் கூறியது. ஜர்னலின் அறிக்கையின்படி, 2003 ஆம் ஆண்டில் எப்ஸ்டீனின் 50 வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் மற்ற நண்பர்கள் ,அறிமுகமானவர்களின் கடிதங்களுடன் இது ஒரு புத்தகத்தில் சேகரிக்கப்பட்டது. ஜனாதிபதி அந்த அறிக்கையை மறுத்து, அந்தக் கடிதத்தை “போலி” என்றார்.
இந்த வழக்கில் ஜர்னலின் வெளியீட்டாளரான டவ் ஜோன்ஸ் & கம்பெனி ,அதன் தாய் நிறுவனமான நியூஸ் கார்ப்பரேஷனின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபர்கள் ஜோசப் பலாஸ்ஸோலோ, கதீஜா சஃப்தர், முர்டோக் , டவ் ஜோன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் தாம்சன் ஆகியோரும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.