வாகனங்களை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இலங்கையை இம்மாத இறுதியில் இலங்கையை வந்தடையும். எதிர்வரும் 25ஆம் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும். குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வாகனமொன்றின் விலை 5,500,000 முதல் 6,000,000 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நாட்களில் வாகன இறக்குமதிக்கான கடன் கடிதங்கள் விடுவிக்கப்பட்டன., எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களின் பின்னர் தொடர்ச்சியாக வாகனங்களைக் கொண்டு வர முடியும்.
அதுவரையில் முற்பணம் செலுத்தி மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என நுகர்வோரிடம் கோருவதாகவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
Trending
- காணி விடுவிப்பு கோரிக்கை – ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார்
- கிளிநொச்சியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மீட்பு
- வேலணை மக்களிடம் மாட்டிய திருடர் குழு
- சீனா மீது 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா
- 15 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் – பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர்கள் கூட்டம்
- ஏபி, ரொய்ட்டர்ஸ், ப்ளூம்பெர்க் உள்ளிட்ட பிரபல ஊடகங்களுக்கு வெள்ளைமாளிகை தடை
- 200 தெலுங்கு ஊழியர்களை வெளியேற்றிய அமெரிக்க நிறுவனம்
- அதி வேக வீதியில் குழந்தை செலுத்திய கார்