காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் மிதந்த நிலையில் சடலமொன்று இன்று திங்கட்கிழமை (18) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்னாயக்க தெரிவித்தார்.
ஆரையம்பதி இராசதுரை கிராமத்தைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
இந்த முதியவர் கடத்த சில தினங்களாக அதிகளவிலான வடிசாராயத்தை அருந்தி வந்த நிலையில், இன்றைய தினம் (18) காலை வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்ததாகவும் பின்னர் அவரை சடலமாக கண்டதாகவும் முதியவரின் மனைவி தெரிவித்தார்.
முதியவரின் மனைவி சடலத்தை அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.