முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்புத் துறையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் துசித ஹல்லோலுவவை ஏற்றிச் சென்ற வாகனம் மீது நேற்ற் நாஹேபிட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் வாகனத்தை வழிமறித்து, பிஸ்டல் வகை ஆயுதத்தைப் பயன்படுத்தி வானத்தை நோக்கியும் வாகனத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஹல்லோலுவா தாக்கப்பட்டதாகவும், தாக்குதலின் போது அவர் வைத்திருந்த இரகசிய கோப்பு திருடப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த வழக்கறிஞர் தினேஷ் தொடங்கொட காயமடைந்தார்.ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறித்து அவதூறான அறிக்கை வெளியிட்டதாக கூறப்படும் ஹல்லோலுவா குற்றச்சாட்டு தொடர்பாக சிஐடி விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஜனாதிபதி கிரேக்கத்தில் பெரும் முதலீடு செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.