முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துடன் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரும், மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் மூங்கிலாறு ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
அவர்களில் உடையார்கட்டு, வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Trending
- சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- ட்ரம்பின் ஆசைப்படி இடிக்கப்படும் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி
- யாழ். போதனா வைத்தியசாலை படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
- ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி
- அமெரிக்கர்களின் உயிரை பறிக்க வந்த கப்பல் – குண்டுவீசி தகர்த்த அமெரிக்கா
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின