அமெரிக்கா தென் கொரியாவைச் சேர்ந்தஅதிகாரிகளுடன் நியூயார்க்கில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து வருவதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா, கூறினார்.வெளியேறும் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் ஐ.நா. பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை முதல் நியூயார்க்கிற்குச் செல்ல இவாயா திட்டமிட்டுள்ளார்.
“ஜப்பான், அமெரிக்கா ,தென் கொரியா ஆகிய நாடுகளுடன் (ஒரு கூட்டத்தை) நடத்துவது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். நமது ஒற்றுமையைப் பேண வேண்டும்,” என்று ஞாயிற்றுக்கிழமை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐவயா கூறினார்.
ஜூலை மாதம் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் தென் கொரிய முதல் துணை வெளியுறவு அமைச்சர் பார்க் யூன் ஜூ ஆகியோரை இவாயா சந்தித்தபோது, வட கொரியாவின் ஏவுகணை மற்றும் அணுசக்தி மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அவர்கள் “கடுமையான கவலையை” வெளிப்படுத்தினர்.
தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அரசாங்க வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது, வட கொரியா அதன் ஆளும் தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் அடுத்த மாதம் ஒரு பெரிய இராணுவ அணிவகுப்பைத் தயாரிப்பதாகத் தெரிகிறது.