இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முறைப்பாட்டின் பிரகாரம் தன்னைக் கைது செய்வதை தடுக்கக்கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன் பிணை மனு தாக்கல் செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர், ஜூலை 18 ஆம்திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் சமர்ப்பிப்புகளை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பினார் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க.