அநுராதபுரத்தில் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பதலாகம பிரதேசத்தில் துப்பாக்கி, வாள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் மிஹிந்தலை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மிஹிந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் மிஹிந்தலை பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடையவர் ஆவார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, வாள் மற்றும் 60 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Trending
- காட்டு யானைகளை சுட்டுக் கொலை செய்வோருக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை
- பரிந்துரைகளை செயல்படுத்த தவறும் அரச அதிகாரிகளுக்கு கடுமையான நடவடிக்கை : மனித உரிமைகள் ஆணைக்குழு
- செம்மணிப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்டது சிறுமியின் என்புத் தொகுதியே!
- வெளிநாடுகளில் தலைமறைவாகிய குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர திட்டம்
- செம்மணி மனித புதைகுழியில் குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் : நிபுணர்கள் கருத்து தெரிவிப்பு
- கிழக்கு ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளத்தில் 11 பேர் காயம்
- போயிங் 777 கொழும்பு சேவையை மேம்படுத்துகிறது
- விண்ணில் இருந்து பூமிக்கு வந்தார் சுக்லா