நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை நாளை திங்கட்கிழமை (10) வெளியிடும் என்று அதன் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மின்சார சபையின் உள்ளக குழு ஊடாக விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்சக்தி அமைச்சும் மின்தடை பற்றிய விரிவான விசாரணையை நடத்தி வருவதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.
இதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க தொடர்புடைய விசாரணை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாடு முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் இவ்வாறு மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது, இறுதியாக 2023 டிசம்பர் 9ஆம் திகதி மின்வெட்டு ஏற்பட்டது, மேலும் மின்சாரத்தை மீட்டெடுக்க சுமார் 6 மணிநேரம் சென்றது.
இதேபோன்று, 2016 மார்ச், 2020 ஓகஸ்ட்டிலும் , 2021 டிசம்பரிலும் மின்சாரம் நாடளாவியரீதியில் துண்டிக்கப்பட்டது.
Trending
- பிரியந்த வீரசூரியவை ஐஜிபியாக அங்கீகரித்தது அரசியலமைப்பு சபை
- அமைச்சர் அருணா ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிப்பு
- முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிடியாணை
- இரயில் டிக்கெட் மோசடி தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் அமைச்சர் – பிமல்
- இராவணன் மறைத்துவைத்த விமானங்களை தேடும் முயற்சி ஆரம்பம்
- கொழும்பில் 20வது சர்வதேச இரட்டையர் ஆய்வு சங்க மாநாடு
- மட்டக்களப்பில் இரயில் மோதி இளைஞன் பலி
- சுற்றுலா சாரதி உரிமத் திட்டம் உள்ளூர் வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது – நாமல்