Thursday, February 5, 2026 7:41 am
மினசோட்டாவில் நடைபெற்ற போராட்டங்களில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்த பிறகு சுமார் 700 பகுடியேற்ற அதிகாரிகளை வெளியேற்ற ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டார். இருப்பினும் சுமார் 2,000 பேர் மாநிலத்தில் இருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
கூட்டாட்சி அதிகாரிகளுடனான மோதல்களில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்ததைத் தொடர்ந்து எழுந்த சீற்றத்தின் மத்தியில் இந்த பின்வாங்கல் வந்துள்ளது. உள்ளூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குடியேறிகளை ஒப்படைக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
ட்ரம்ப் நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்ட முகமூடி அணிந்த முகவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக மினசோட்டாவின் மிகப்பெரிய நகரமான மினியாபோலிஸில் கடந்த மாதம் ரெனீ குட் , அலெக்ஸ் பிரெட்டி ஆகியோர் தனித்தனி சம்பவங்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

