மஸ்கெலியா லக்சபான தோட்ட பிரிவில் உள்ள உதவி முகாமையாளர் வதிவிட பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன் இறந்து நிலையில் சிறுத்தை ஒன்றின் உடலினை கண்ட தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளருக்கு தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து தோட்ட முகாமைத்துவம் நல்லதண்ணி வனத் துறை அதிகாரி கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
சுமார் 8 வயது மதிக்கத்தக்க சிறுத்தை இறந்து கிடந்த இடத்திற்க்கு நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் சென்று சிறுத்தையின் உடலத்தை பரிசோதனை மேற்கொள்ள ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இது குறித்து நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்