பதுளை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் புறப்பட்ட பொடி மெனிகே கடுகதி ரயில் தடம் புரண்டுள்ளது.
இன்று (11) காலை 08.50 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து இந்த ரயில் புறப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த ரயில் ஹாலிஎல ரயில் நிலையத்திற்கும் பதுளை ரயில் நிலையத்திற்கும் இடையில் காலை 09.10 மணியளவில் தடம் புரண்டுள்ளது.
இதனையடுத்து குறித்த ரயிலை மீள் தடம் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.