பெருந்தோட்டத்துறைக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை கலைப்பதற்கு, அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
மலையக சமூகம் மிக நீண்டகாலமாக எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் குறித்த அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மலையக அபிவிருத்தி அதிகார சபையை நீக்குவதென்பது, வரலாற்று ரீதியில் ஒதுக்கப்பட்டுள்ள சமூகத்தின், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனவே, குறித்த தீர்மானம் தொடர்பில் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.