Thursday, August 14, 2025 8:29 am
கண்டி பொலிஸ் பிரிவின் பொல்கொல்ல பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவரின் ஆள் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர், நீல நிற டி-சர்ட் மற்றும் நீல நிற டெனிம் காற்சட்டை அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

