வடமாகாண பாடசாலைகளுக்கிடையே துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்று நிறைவடைந்த தடகளப் போட்டியில் மகாஜனக் கல்லூரியின் வீரன் பிரவீன் 14 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு 100 மீற்றர் ஓட்டத்தில் 12.8 செக்கன்களில் ஓடிமுடித்து, 14 வயது ஆண்கள் பிரிவில் சிறந்த சுவட்டு வீரனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.