இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 4,000 போலி 100 யுவான் நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான 28 வயதுடைய சீன பிரஜை கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 6 கிலோகிராம் 32 கிராம் போலி இரத்தினக் கற்களுடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் இருந்து ஒரு மடிக்கணினி, 1 ஐபேட் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி ஆகியவை மீட்கப்பட்டன. சந்தேக நபர் 52 வயதுடைய சீன பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர்.
Trending
- உத்தியோக பூர்வ இல்லத்தைக் காலி செய்கிறார் மஹிந்த
- நிஷாந்த உலுகேதென்ன மீளவும் விளக்கமறியலில்
- நேபாள நிலைமை தொடர்பில் ரணில் விசேட அறிக்கை
- யாழில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட வாகனங்கள்
- வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா
- மின்சார கட்டணம் 6.8% அதிகரிக்கும் சாத்தியம்
- சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு : பிரதான சந்தேகநபர் கைது
- வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு