பொரலஸ்கமுவவில் ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபச்சார விடுதியில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, ஓட்டுநர் உரிமங்கள், தேசிய அடையாள அட்டைகள் கடவுச்சீட்டுகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை உருவாக்கியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை விபச்சார விடுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போலியான தேசிய அடையாள அட்டை (NIC) வைத்திருந்த ஒரு பெண் சந்தேக நபரை பொலிஸார் கண்டுபிடித்தனர். அந்தப் பெண்ணை விசாரித்ததில், போலி ஆவணங்களை உருவாக்க உதவிய ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், ராஜகிரியவில் உள்ள ஒபேசேகரபுராவில் ஒரு இடத்தை பொலிஸார் கண்டுபிடித்து, போலி ஆவணங்களை உருவாக்கி, அந்த இடத்தை இயக்கும் ஒருவரை கைது செய்தனர். சோதனையின் போது, பொலிஸார் ஒரு மடிக்கணினி, ஒரு வண்ண அச்சுப்பொறி , ஒரு ஸ்கேனர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட் இருவரும் இன்று நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்கள் 2025 ஏப்ரல் 21 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Trending
- 10 வருடங்களுக்கு பிறகு தமிழில் அப்பாஸ்
- தாய்லாந்து கம்பொடியா எல்லையில் மோதல்
- ஃபெராராவுடன் மீண்டும் இணைந்தார் ஜானிக் சின்னர்
- ஓபரா ஹவுஸுக்கு மெலனியா ட்ரம்பின் பெயரை வைக்க கோரிக்கை
- ஜப்பான் பிரதமர் இஷிபா இராஜினாமா?
- ரணிலின் 2022 அவசரகால பிரகடனம் அரசியலமைப்பிற்கு முரணானது உச்ச நீதிமன்றம்
- இலங்கை இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வாய் புற்றுநோய்
- இலங்கையில் 507 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடு