பொலன்னறுவையில் 2004ஆம் ஆண்டு ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்திக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு கு பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த வௌ்ளிக்கிழமை (12) , ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
2004இல், பொலன்னறுவை மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நான்கு பொலிஸார் , பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தலைமையில், சட்டவிரோத மதுபானம் தேடி ஹோட்டல் ஒன்றில் சோதனை நடத்தினர்.
இதன்போது ஹோட்டல் முகாமையாளருக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பொலிஸாரின் தாக்குதலில் முகாமையாளர் உயிரிழந்தார்.
இதையடுத்து, நான்கு பொலிஸார்ம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, பொலிஸ் பரிசோதகர் வசந்த நோயால் உயிரிழந்தார். எஞ்சிய மூன்று பொலிசாருக்கு 2025 ஜனவரியில் மீண்டும் பணி வழங்கப்பட்டு, அவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெகத் பிரியந்த மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கும், மற்ற இருவர் வேறு மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கும் இடமாற்றப்பட்டனர்.
2025 செப்டம்பர் 12 அன்று, மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மூன்று பொலிஸாரும் ஆஜராகினர். சாட்சிகள் , ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டு, ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்புக்குப் பின், மூவரும் சிறைச்சாலை அதிகாரிகளால் பொலன்னறுவை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Trending
- பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு 7 வருட சிறைத் தண்டனை
- தமிழரசு கட்சி தவறான முடிவை எடுத்துள்ளது – இரா. சாணக்கியன் !
- நவீன மயமாகிறது தபால் சேவை 2,085 மில்லியன் ஒதுக்கீடு
- 11 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டது
- பத்திரிகை சுதந்திரம் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது
- ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
- பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களைச் சந்தித்தார் பிரதமர்
- 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பயணிகளுக்கு சீட் பெல்ட் கட்டாயம்