கோபாலபுரம் – நிலாவெளி ஜனாஸா சங்கத்தின் ஏற்பாட்டினால், கோபாலபுரம் மையவாடியை சுத்தம் செய்யும் பணி நேற்று மாலை (17)நடைபெற்றது.
ஜனாஸா சங்கத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான என்.எம்.இல்ஹாம்
தலைமையில் இடம்பெற்ற இந்த சிரமதானம் பணியில் கோபாலபுரம் முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர்,இளைஞர் அமைப்புகள், சமூகசேவை அமைப்புக்கள் விளையாட்டுக் கழகங்கள் ஆகியவை கலந்துகொண்டன்.
கோபாலபுரம் – மையவாடி இருள் நிறைந்த நிலைமையில் பல வருடங்களாக காணப்படுகிறது. நீர் வசதி , சுற்றுமதில் ஆகியன இல்லை. இக்குறைபாட்டை மிக விரைவில் செய்து முடிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வருவதாக ஜனாஸா சங்கத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான என்.எம்.இல்ஹாம் தெரிவித்தார்.
பொதுமக்களினால் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற, அரச, அரச சார்பற்ற இடங்கள், பஸ்தரிப்பு நிலையம் போன்ற இடங்களை துப்பரவு செய்து வருவதுடன், அதனை பொதுமக்கள் பாவிக்கும் வகையில் திருத்தியமைக்கும் பணியினை அமைப்பின் தலைவர் என்.எம்.இல்ஹாமினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
