பிறேஸில் உதை பந்தாட்ட அணி அடுத்த வாரத்திற்குள் புதிய ஆண்கள் தேசிய அணி பயிற்சியாளரை நியமிக்க இலக்கு வைத்துள்ளதாக விளையாட்டு இயக்குனர் ரோட்ரிகோ சீட்டானோ திங்களன்று தெரிவித்தார்.
மார்ச் 28 ஆம் திகதி, பியூனஸ் அயர்ஸில் நடந்த உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் ஆர்ஜென்ரீனாவிடம் 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து டோரிவல் ஜூனியர் நீக்கப்பட்டார். அன்றில் இருந்து இந்தப் பதவி காலியாக உள்ளது. எட்னால்டோ ரோட்ரிக்ஸ் , தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஜுவான் சாண்டோஸ் ஆகியோருடன் சாத்தியமான வேட்பாளர்களை தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதாக கேடானோ கூறினார். ரியல் மாட்ரிட் மேலாளர் கார்லோ அன்செலோட்டி CBF இன் விருப்பமான தேர்வாக இருப்பதாக புரிந்து கொள்ளப்படுகிறது, ஜார்ஜ் ஜீசஸ் , ஏபெல் ஃபெரீரா ஆகியோரும் போட்டியாளர்களாக உள்ளனர்.
ஜூன் மாதம் ஈக்வடார் , பராகுவே ஆகியனவறுக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்குள் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 அணிகளைக் கொண்ட தென் அமெரிக்க தகுதிச் சுற்றில் பிறேஸிசில் நான்காவது இடத்தில் உள்ளது,
முதல் ஆறு அணிகள் அடுத்த ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறும் கால்பந்து ஷோபீஸ் போட்டியில் தானாகவே இடம் பெறும். ஏழாவது இடத்தில் உள்ள அணி கண்டங்களுக்கு இடையேயான பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.