பிரித்தானியாவில் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணவீக்கத்தால், பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கல்வியுடன் சேர்த்து அதிக நேரம் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Higher Education Policy Institute (HEPI) வெளியிட்ட அறிக்கையின்படி, ஏராளமான மாணவர்கள் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்ள வாரத்திற்கு சராசரியாக 56 மணிநேரம் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
முந்தைய கல்வி ஆண்டில் குறைந்தது 56% மாணவர்கள் கல்வி செலவுகளைச் சமாளிக்க பணி புரிந்ததாகவும், செலவுகளின் அழுத்தம் காரணமாக பலர் நீண்ட நேரப் பணிச் சுமையைச் சுமப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதன் விளைவாக மாணவர்கள் கல்வியைக் கைவிடும் (dropout) அபாயம் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே மாணவர்கள் வாழ்வதற்குத் தேவையான உதவிகளை அரசு மற்றும் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும் எனவும் மனநல ஆலோசகர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.