பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இத்துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவலின் படி,
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தாக்குதல்காரர்கள் T-56 தாக்குதல் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணைகள் நடந்து வருகின்றன.