பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த இந்த தொடரின் திட்டமிடல் சிக்கல்கள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
முன்னதாக, இரண்டு அணிகளுக்கும் இடையில் மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இந்த தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
அயர்லாந்து அணியின் முதலாவது பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணமாக இருந்த இந்தத் தொடர் குறித்த அறிவிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியானமை குறிப்பிடத்தக்கது.
Trending
- இன்று முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரம்
- வேலணையில் நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம்
- செம்மணியில் மனித உரிமைகள் ஆணைக்குழு
- செயற்கை சிறுநீரகம் கண்டுபிடிப்பு
- பாகிஸ்தான் – அயர்லாந்து கிரிக்கெட் தொடர் 2027வரை ஒத்திவைப்பு
- AI உதவியுடன் இசையமைத்த அனிருத்
- இன்ஸ்டாவில் புதிய கட்டுப்பாடு
- சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள்