தங்களது விசாரணைகளின் முடிவில் வழங்கப்படும் பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 15(7) படி, பரிந்துரைகளை செயல்படுத்திய விபரங்களை, நியமிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அரச நிறுவனங்கள், ஆணைக்குழுவுக்கு அறிவிப்பது கட்டாயமாகும்.
சில நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள், பரிந்துரைகளை செயல்படுத்த மறுத்து “மேன்முறையீடு உள்ளது” எனக் கூறுவதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டித்துள்ளது. சட்டத்தின் பிரகாரம், தங்களது பரிந்துரைகள் மீது மேன்முறையீட்டுக்கான வாய்ப்பு ஏதும் இல்லை எனவும், அதனைச் சுட்டிகாட்டி பரிந்துரைகளை செயல்படுத்துவதை தவிர்ப்பது சட்டவிரோதமானது எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் சட்டப்பூர்வ கடமைகளை உணர்ந்து, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மதித்து, மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதனை தவிர்க்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Trending
- சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை கண்டிக்கிறது ஆப்கானிஸ்தான்
- செவ்வாய் பாறை $4.3 மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது
- பாராளுமன்றத்தை சுற்றிய ட்ரோன்
- நடிகை எம்மா வாட்சன் 6 மாதங்கள் வாகனம் ஓட தடை
- கெஹெலிய குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு
- கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு
- நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் : சாரதிகளுக்கு எச்சரிக்கை
- மண்ணெண்ணெய் கலந்து பாரவூர்தி செலுத்திய சாரதி கைது