ரைபகினாவின் பயிற்சியாளர் ஸ்டெபானோ வுகோவ்வின் மீது விதிக்கப்பட்ட இடை நீக்கம் இரத்துச் செய்யப்பட்டது.
அவர்மீண்டும் வீரர் பகுதிகள் ,பயிற்சி மைதானங்களுக்குள் நுழைய அனுமதிக்கும் சான்றுகளைப் பெற அனுமதிக்கப்படுவார் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நடத்தை விதிகலை மீறியதால் ஜனவரி மாதம் ஸ்டெஃபனோ வுகோவ் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். பெப்ரவரியில் அது முடிந்துவிட்டதாகவும், தடை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கூறாமல் அமுலில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேன் முறையீட்டில் தடை இரத்துச் செய்யப்பட்டது.