உலகளாவிய ஜனநாயகம் வியத்தகு முறையில் பலவீனமடைந்து வருவதால், உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திரம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக ஒரு முக்கிய அறிக்கை கண்டறிந்துள்ளது.
ஸ்டாக்ஹோமை தளமாகக் கொண்ட சர்வதேச ஜனநாயகம் , தேர்தல் உதவி நிறுவனம் ஆகியன வற்றின் அரிக்கையின் பிரகாரம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 94 நாடுகளில் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பாரிய சமூக, பொருளாதார மாற்றங்கள் காரணமாக, ஜனநாயகம் எதேச்சதிகார மறுமலர்ச்சி மற்றும் கடுமையான நிச்சயமற்ற தன்மையின் சரியான புயலை எதிர்கொள்கிறது” என்று சிந்தனைக் குழுவின் பொதுச் செயலாளர் கெவின் காசாஸ்-ஜமோரா கூறினார்