நெடுந்தீவில் நேற்றையதினம்(18) மாலை வேளை முதலை ஒன்று உயிருடன் பிடிபட்டுள்ளது.
நெடுந்தீவு வெட்டுக்களிப் பகுதியினை அண்மித்த இடத்தில் உள்ள நீர் முற்றாக வற்றிப்போன பாழடைந்த கிணற்றில் இருந்தே முதலை கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட 5 அடி நீளமுடைய முதலை நெடுந்தீவு பிரதேச சபையின் உபதலைவரின் உதவியுடன் அங்கிருந்து மீட்கப்பட்டு நெடுந்தீவு பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முதலையை குறித்த திணைக்களத்தினர் கடலில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டபோது, அதனை பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததனையடுத்து திணைக்களத்தின் கிளிநொச்சி அலுவலகம் ஊடாக மேலதிக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
நெடுந்தீவுக்கு எவ்வாறு முதலை வந்தது, வேறு முதலைகள் தீவுக்குள் உள்ளதா, எனும் கேள்விகளுடன் இதற்கான நிரந்தர தீர்வு, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பு என்பன தொடர்பிலும் மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Trending
- அவதூறு செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது நோட்டீஸ்
- நடிகர் ஷாருக்கானுக்கு காயம், அமெரிக்காவில் சிகிச்சை
- ஸிம்பாப்வேயில் மலேரியா மீண்டும் தீவிரமடைந்துள்ளது
- நெடுந்தீவில் பிடிபட்ட முதலை வன ஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைப்பு
- மகளிர் உலகக் கிண்ண அரையிறுதிக்கு நான்கு அணிகள் முன்னேறின.
- உயர் தொழில்நுட்ப மருந்து சோதனை முறையை இலங்கைக்கு வழங்குகிறது அமெரிக்கா
- யாழில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஆதரவு வழங்குவேன் : பாடகர் ஸ்ரீநிவாஸ்
- மாணவன் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சம்பவம் : விசாரணைகள் ஆரம்பம்