நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்தார்.
கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவரை வரவேற்றார்.
வின்ஸ்டன் பீட்டர்ஸ் தனது அதிகாரப்பூர்வ பணிகளின் ஒரு பகுதியாக 2025 மே 24 முதல் 28 வரை இலங்கையில் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.