சர்ச்சைக்குரிய கிரிஷ் திட்டத்தில் 70 மில்லியன் முறைகேடு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
முந்தைய ராஜபக்சே நிர்வாகத்தின் போது இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனமான க்ரிஷ் குழுமத்தின் இலங்கையில் முதலீடுகள் தொடர்பான நிதி முறைகேடுகள் ,முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளைச் சுற்றியே இந்த வழக்கு உள்ளது.
கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட், இலங்கையின் ரக்பி விளையாட்டின் அபிவிருத்திக்காக 70 மில்லியன் ரூபாவை, சிலோன் பிரீமியம் ஸ்போர்ட்ஸ் தலைவர் நிஹால் ஹேமசிறி பெரேராவிடம் வழங்கியிருந்தது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, நிஹால் ஹேமசிறி பெரேராவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்கிற்கு கிரிஷ் நிறுவனம் பணத்தை அனுப்பியதாகவும், பின்னர் அவர், நாமல் ராஜபக்சவிடம் இரண்டு தடவை பணத்தை வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கிரிஷ் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பணத்தை சந்தேகநபர், நிறுவனத்தின் உண்மையான நோக்கத்திற்கு பயன்படுத்தாமல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறி, இந்த வழக்கை, ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தாக்கல் செய்துள்ளார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!