வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாளாக திருவிழாவான மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) இன்று செவ்வாய்க்கிழமை [19] சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளிவீதியுலா வந்தனர்.
இந்த மாம்பழ திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். அத்தோடு முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார். புராணக் கதையை மையமாகக்கொண்டே ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழா இடம்பெற்று வருகிறது.
