நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் “மிஸிஸ் அண்ட் மிஸ்டர்”. இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். அவருடன் ரொபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்துள்ளார்.
வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ரொபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.
இந்த நிலையில் வனிதா விஜயகுமார் படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன் நீதிபதி செந்தில்குமார் இராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்துள்ளார்.
வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள “மிஸிஸ் அண்ட் மிஸ்டர்” திரைப்படத்தில், என்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த படத்தில் இருந்து “இராத்திரி சிவராத்திரி” என்ற பாடலை நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
Trending
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி