ஹரி பாட்டர் படங்களில் நடித்து உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகை எம்மா வாட்சன். அந்த படத்தில் ஹெர்மாயினி கிரேஞ்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். 10 வயதில் நடிக்க வந்து, உலகம் முழுவதும் இரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்தார்.
கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகிய அவர் தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பயின்று வருகிறார்.
எம்மா வாட்சன் கடந்த ஆண்டு ஒக்ஸ்போர்ட் நகரத்தில் 48 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டிய வீதியில் 60 கிலோமீட்டர் வேகத்தில் தனது காரை ஓட்டிச் சென்றார்.
இதுகுறித்து அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவருக்கான தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எம்மா வாட்சனுக்கு 6 மாதங்கள் வாகனம் ஓட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Trending
- உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து!
- மாத்தறையில் மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை
- தமிழகத்திலிருந்து நல்லூருக்கு வந்த கலைஞர்கள்
- எல்ல பஸ் விபத்து : ஜீப் வாகன சாரதி கைது
- எல்ல பஸ் விபத்து : மீட்புபணியில் ஹெலிகொப்டர்கள்
- எல்ல பஸ் விபத்தில் இதுவரை 15 பேர் பலி
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது