தெஹ்ரானுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா கோரியதை அடுத்து, சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ஆதரவாக நிற்கின்றன.
2015 ஆம் ஆண்டில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஜேர்மனியுடனான ஒரு ஒப்பந்தத்தில் சர்வதேச தடைகளை நீக்குவதற்கு ஈடாக ஈரான் தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டது. ஆனால் 2018 ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதியாக தனது முதல் பதவிக்காலத்தில் ஒரு வருடம் கழித்து டொனால்ட் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகினார்.
அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான அமெரிக்காவின் “கட்டளைகளை” தெஹ்ரான் நிராகரித்த சில நாட்களுக்குப் பிறகு, ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி ஆகியோருடனான சந்திப்பு நடந்தது.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடவில்லை என்பதை நீண்ட காலமாக மறுத்து வருகிறது. ஆனால் சர்வதேச அணுசக்தி நிறுவனம் கடந்த மாதம் தெஹ்ரான் யுரேனிய செறிவூட்டலை “வியத்தகு முறையில்” 90% ஆயுத தர நிலைக்கு அருகில் கொண்டு வருவதாக எச்சரித்தது.
Trending
- அனல் மின் மாஃபியாவின் கைப்பாவையாக அரசாங்கம் மாறிவிட்டது – சஜித்
- எதிர்க்கட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று கூறவில்லை – ஜனாதிபதி
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்
- வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக பைஷல் கடமையேற்பு