தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திசாநாயக்க தாக்கல் செய்த பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 250,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 5 மில்லியன் ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளை விதித்து பிணை வழங்கினார்.குற்றம் சாட்டப்பட்டவருக்கு பயணத் தடையையும் நீதிமன்றம் விதித்தது.
கூடுதலாக, இரண்டு சரீரப் பிணையாளர்களும் கொழும்பு மாவட்டத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.