கொழும்பு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை காலை துப்பாக்கியால் சுட்ட நபருக்கு ஒரு பெண் உதவி செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார். அங்கு ஒரு குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.
“சந்தேக நபர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது,” என்று மனதுங்க கூறினார்.
கொழும்பு குற்றப்பிரிவின் தலைமையில், குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) உதவியுடன் ஐந்து குழுக்கள் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக, சிறப்பு ஊடக சந்திப்பின் போது மானதுங்க தெரிவித்தார்.
“சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்,” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.